ஸ்டாலின் அய்யா ஆட்சியில் இருந்தப்பவும் சரி, இப்பவும் சரி.. சுத்தி இருக்கிற அந்த 4 பேரு அவரை ஏமாத்திக்கிட்டேதான் இருக்காங்க; அவரைப் பார்த்தா கோபம் வரலை, பரிதாபமாதான் இருக்கு!” என்று மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் தவெக அமைச்சர் அருண்ராஜ் திமுக தலைவரை நோக்கிப் பேசியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெகவின் பிரம்மாண்ட இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், சுற்றி இருக்கும் 4 பேர் கொடுக்கும் பொய் அறிக்கைகளை நம்பி தமிழ்நாட்டில் ஏதோ பொற்கால ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும், தற்பொழுது அதே 4 பேர் தவெக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக அவரை நம்ப வைத்து ஏமாற்றி வருவதாகவும் கடுமையாகச் சாடினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தத் தொடர் அதிரடிப் பேச்சுக்கள், தற்பொழுது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.