அதிமுக-வைத் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் நின்று ஜெயலலிதா காலத்திலேயே திமுக-வால் அழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த ஸ்டாலின், ஒரு கைகூலியை அதிமுக-விற்குள்ளேயே உருவாக்கினார் என்று சி.வி. சண்முகம் குற்றம் சாட்டினார். அந்த நபர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும், அவர் மூலம் அதிமுக சின்னத்தை முடக்கவும், கட்சியைப் பிளவுபடுத்தவும் திமுக மாஸ்டர் பிளான் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவி வரை அனுபவித்துவிட்டு, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதே ஆட்சிக்கு எதிராக திமுக-வுடன் கைகோர்த்து ஓட்டுப் போட்டவர்தான் இந்த ஓபிஎஸ். “இவ்வளவு செய்தும் அவரை மன்னித்து ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம்; ஆனால் அவர் ஒவ்வொரு கட்டத்திலும் கட்சியின் முடிவுகளை முடக்கி, அதிமுக வேகமாகச் செயல்படாமல் பார்த்துக்கொண்டார். திமுக செய்ய வேண்டிய வேலையை அதிமுக-விற்குள்ளேயே இருந்து செய்தவர்தான் ஓபிஎஸ்” என்று அவர் தோலுரித்துக் காட்டினார்.
