அதிமுக தலைமை அலுவலகம் என்பது கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு ஒரு கோவில் போன்றது. இந்த இடத்தைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையார் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தொண்டர்களுக்காகத் தானமாக வழங்கினார். அத்தகைய புனிதமான இடத்தின் கதவை காலால் எட்டி உதைத்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்று சி.வி. சண்முகம் ஆவேசப்பட்டார்.

​”எந்த இயக்கம் அவருக்குப் பதவி, அந்தஸ்து, அதிகாரம் என அனைத்தையும் கொடுத்ததோ, அதே இயக்கத்தின் கோவிலை உதைத்த பாவம் அவரைச் சும்மா விடாது” என்று அவர் கூறினார். அந்தத் துரோகத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் தான் பொதுக்குழு ஒன்றுகூடி, சதிகாரர்களையும் கைகூலிகளையும் கட்சியை விட்டு வெளியேற்றியது என்று அவர் விளக்கம் அளித்தார்.