இண்டியா கூட்டணிக்குள் நிலவும் தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் போட்டி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ காட்டமான ஆலோசனையை வழங்கியுள்ளது. “முதலில் கூட்டணிக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அந்தப் பத்திரிகை, இக்கட்டான இந்தச் சூழலில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு, கூட்டணியை வழிநடத்தப்போவது யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

​கூட்டணியை ஒருங்கிணைக்கும் அந்தத் தலைவர் மு.க.ஸ்டாலினா, மம்தா பானர்ஜியா அல்லது வேறு யாராவதா? என்பதை உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என்றும், தங்களுக்குள் மோதிக்கொள்வதைத் தவிர்க்காவிட்டால் அது மொத்த கூட்டணிக்கே ஆபத்தாக முடியும் என்றும் சாம்னா எச்சரித்துள்ளது. பாசிச சக்திகளை எதிர்க்க ஒன்று கூடியவர்கள், தலைமைப் பண்பில் கோட்டை விடக்கூடாது என்பதே சிவசேனாவின் முக்கிய கருத்தாக உள்ளது.