குஜராத் மாநிலம் நதியாட்டில் உள்ள ஒரு பள்ளியின் பிரின்சிபல் தனது பதவியைப் பயன்படுத்தி ஒரு தாயிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழ் (TC) பெற வந்த அந்த இந்துத் தாயிடம், டிசி வேண்டுமானால் தன்னைத் தனியாக ஒரு ஹோட்டலில் வந்து சந்திக்க வேண்டும் என அந்தத் பிரின்சிபல் வற்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, வாட்ஸ்அப்பில் மிகவும் ஆபாசமான மற்றும் அநாகரீகமான செய்திகளை அனுப்பி அந்தப் பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
A school principal demanded a Hindu mother to meet him in a hotel for her child's Transfer Certificate & sent inappropriate messages in Nadiad, Gujarat.
She called Bajrang Dal who acted swiftly, caught the pervert red-handed from the hotel and handed him to police. pic.twitter.com/5PNl9hL6Ca
— Team Hindu United (@TeamHinduUnited) February 14, 2026
அந்தப் பெண் தைரியமாக இந்த விவகாரத்தை பஜ்ரங் தள அமைப்பினரிடம் கொண்டு சென்றார். அவர்களின் ஆலோசனையின்படி, அந்தத் தலைமையாசிரியர் கூறிய ஹோட்டலுக்குச் சென்றபோது, பஜ்ரங் தளத்தினர் மின்னல் வேகத்தில் அங்கே புகுந்து அந்தத் பிரின்சிபாலை கையும் களவுமாகப் பிடித்தனர். ஹோட்டல் அறையிலேயே அவருக்கு “முறையான கவனிப்பு” கொடுத்து, பின்னர் இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஒரு கல்வியாளரே இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்த பஜ்ரங் தளத்தினருக்கு அந்தப் பெண் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.
