சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையுமே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒரு புனிதமான துறவற உடையில் (Nun) சென்று கொண்டிருந்த பெண்ணை, ஒரு கும்பலாகச் சூழ்ந்த மாணவர்கள், மிகவும் அநாகரீகமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் வம்புக்கு இழுத்துள்ளனர். குறிப்பாக, அந்தப் பெண்ணை ஆபாசப் பட நடிகைகளுடன் ஒப்பிட்டுப் பேசியதோடு, “Brazzers டீமில் விளையாட வருகிறீர்களா?” என்று இரட்டை அர்த்தத்தில் மாணவர்கள் கேள்வி எழுப்பியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டே இந்த வீடியோவைப் பதிவு செய்துள்ளனர்.

​இந்தச் சம்பவம் (X) போன்ற தளங்களில் பகிரப்பட்டதையடுத்து, பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. “சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் தாராளமாகக் கிடைப்பதும், இணையதளங்களில் தவறான விஷயங்களை எளிதாகப் பார்ப்பதுமே இது போன்ற நடத்தைகளுக்குக் காரணம்” என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர். கல்வி நிலையங்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்குப் பிறரை மதிக்கும் பண்பையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தெளிவானத் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.