மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், மின்னல் வேகத்தில் தனது மொபைலில் டைப் செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பதை கவனித்த சக பயணி ஒருவர், அதை வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண்ணின் விரல்கள் கீபோர்டில் விளையாடும் வேகத்தைப் பார்த்த பயணிகள், “இவ்வளவு ஸ்பீடாக எப்படி டைப் செய்கிறார்?” என்று ஆச்சரியப்பட்ட அதே வேளையில், அவர் பல காதலர்களுடன் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

​இன்றைய காலக்கட்டத்தில் காதல் மற்றும் உறவுகளில் உண்மைத்தன்மை என்பது கேள்விக்குறியாகி வருவதை இந்த வீடியோ அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது. ஒருவருடன் பேசும்போதே மற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற ‘டெக்னிக்கை’ அந்தப் பெண் கையாண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. “யாராவது ஒருவரிடம் மாட்டிக் கொள்ளும் வரைதான் இந்த ஆட்டம் எல்லாம்” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைத்து ரக ரகமாக கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.