திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஒரு 25 வயது வாலிபர் கடத்தி, மான்தோப்பில் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தேள்ளது. பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சிறுமியை, வழியிலேயே மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்துள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அந்தச் சிறுமியை தாக்கி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த சிறுமி தன் பாட்டியிடம் நிகழ்ந்ததை கூறியதுடன், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்று ஐந்து நாட்கள் ஆகியும், குற்றவாளி பிடிபடாத நிலையில் இருப்பது அப்பகுதி மக்களில் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிறுமியை கடத்திச் செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், குற்றவாளியை விரைவில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.