தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள யாகுத்புரா பகுதியில் வியாழக்கிழமை காலை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி, ரெய்ன் பஜார் பகுதியில் திறந்த நிலையில் இருந்த மேன்ஹோலில் விழுந்தது. தாயுடன் நடந்து சென்ற அந்த சிறுமி, குழி திறந்திருப்பதை கவனிக்காமல் விழுந்துவிட்டார். உடனடியாக தாய் குதித்து மீட்க முயற்சித்தார்.
அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு சிறுமியை உயிருடன் வெளியே எடுத்தனர். லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி, அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உள்ளூர்வாசிகள், “அலட்சியத்திற்குக் காரணம் கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சி (GHMC)” என குற்றம் சாட்டினர்.
तेलंगाना : हैदराबाद से एक चौंकाने वाला वीडियो सामने आया है.
◆ वीडियो में दिख रहा है कि दो बच्चियां अपनी मां के साथ स्कूल जा रही हैं और उनमें से एक खुले मैनहोल में गिर जाती है.
◆ हालांकि गनीमत ये रही कि समय रहते मां और स्थानिय लोगों ने उसे बचा लिया.#Hydrabad | Hydrabad |… pic.twitter.com/MjqJnBEiCH
— News24 (@news24tvchannel) September 11, 2025
“>
இதற்கிடையில் GHMC மற்றும் HYDRAA எனப்படும் பேரிடர் மேலாண்மை அமைப்புக்கும் இடையே குற்றச்சாட்டுகள் மோதிக்கொண்டுள்ளன. GHMC, HYDRAA குழு மூடியை சரியாக வைக்காமல் விட்டு சென்றது என கூற, HYDRAA தரப்பில் எங்களுடைய அலட்சியம் இல்லை என மறுத்துள்ளது.
இந்த சம்பவம், சாலைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.
