யுபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு செப்டம்பர் 15 முதல் தற்போதைய ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

இதன் மூலம் காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை செலுத்த இயலும். அதே நேரத்தில், தனிநபர் தினசரி யுபிஐ பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.1 லட்சமாக மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.