டெல்லியில் அதிவேகமாகச் சென்ற ஸ்கார்பியோ கார் ஒன்று, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான முறையில் வழித்தடங்களை மாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, அந்த காரின் பின்புறத்தில் ‘தாவுத்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை துச்சமாக மதித்து, சிக்னல் ஏதுமின்றி திடீர் திடீரென காரைச் செலுத்திய அந்த ஓட்டுநரின் செயல், சாலையில் பயணித்த பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
99% of Delhi NCR people driving Mahindra’s XUV, Thar and Scorpio are mentally ill.
Stay 100mtr away from them and politely change your lane if u see them in the rear mirror. pic.twitter.com/3qN4coS9Gp
— Kapil (@kapsology) January 19, 2026
“>
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. இதனைப் பார்த்த இணையவாசிகள், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், காரைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்துள்ள டெல்லி போக்குவரத்து போலீஸார், இச்சம்பவம் நடந்த சரியான இடம், தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதுடன், விதிமீறலில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
