தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் ஆல்யா மானசா. இவருடைய நடிப்புக்கு தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இருந்தாலும் இருவரும் சின்னத்திரையை விட்டு விலகாமல் ஆளுக்கு ஒரு சீரியலில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இனியா சீரியலில் நடித்து வரும் ஆல்யா என்னதான் சூட்டிங் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதன்படி சூட்டிங் ஸ்பாட்டில் ட்ரெண்டிங் பாடல் ஒன்றுக்கு அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

alya_manasa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@alya_manasa)