இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படம் இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அப்படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த உள்ளார். இதன் காரணமாக அனைத்து சமூக வலைதள பக்கத்திலிருந்தும் சிறிது காலம் ஓய்வு பெறுவதாக தன்னுடைய ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது G Squad நிறுவனத்தின் முதல் படமாக, விஜய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘Fight Club’ படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பிற்காக நன்றியும் தெரிவித்துள்ளார். இதே போன்று விக்ரம் படத்திற்கு பின்னர் லியோ பட வேலைக்காக சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.