தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், ஒரு வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்யச் சென்றபோது ரசிகர்களின் பெரும் கூட்டத்தால் சூழப்பட்டார். தங்களுக்குப் பிடித்தமான வீரரைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகமடைந்து, அவருடன் செல்ஃபி எடுக்கவும் கையெழுத்து பெறவும் முண்டியடித்தனர்.
மேலும் ஆரம்பத்தில் பொறுமையாக இருந்த கிளாசென், கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்ததாலும், ரசிகர்கள் அவரை நெருக்கியதாலும் ஒரு கட்டத்தில் பெரும் சங்கடத்திற்குள்ளானார். தன்னுடைய தனிப்பட்ட நேரத்தை அமைதியாகக் கழிக்க விரும்பிய கிளாசென், ரசிகர்களின் இந்த வரம்பு மீறிய செயலால் கடும் அதிருப்தி அடைந்து தனது நிதானத்தை இழந்தார்.
Heated moment with Heinrich Klassen 🤯
– Heinrich Klaasen loses his cool after getting mobbed by excited fans at a shopping mall in Hyderabad🥲 pic.twitter.com/cZbLyrorfl
— Sam (@Cricsam01) May 4, 2026
“>
இதனால் அங்கிருந்தவர்களிடம் கோபமாகப் பேசியதோடு, விரைவாக அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றார். இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “வீரர்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் தேவை” என ஒரு தரப்பினரும், “ரசிகர்களின் அன்பை அவர் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம்” என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
