தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுது தேர்தல் வாக்குறுதிகளின்படி ஆவின் பால் விலையானது லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆவின் பால் விலை லிட்டர் 40லிருந்து 37 ஆக குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை குறைவு காரணமாக பால் விற்பனை வெகுவாக அதிகரித்த நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு மூன்று ரூபாய் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டருக்கு ஆறு ரூபாய் அரசு நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அதனால் தற்போது பால் விற்பனை விலையும் மீண்டும் உயர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதனால் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்