டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜிடிபி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மருத்துவமனையின் வார்டு பகுதியில் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் தரையில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே நாய் ஒன்று சிறுநீர் கழிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய மருத்துவமனையில், சுகாதாரத்தைப் பேணுவதில் இவ்வளவு பெரிய அலட்சியம் காட்டுவது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவமனை பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.