பான் கார்டு பெறுவதில் நிலவும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், போலி கார்டுகளை ஒழிக்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணைக் கட்டாயமாக இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் இணைக்கத் தவறினால், உங்கள் பான் கார்டு செல்லாததாக அறிவிக்கப்படும் (Deactivated). இதன் விளைவாக வங்கிப் பணப்பரிமாற்றங்கள் முடக்கப்படுவதோடு, வருமான வரி தாக்கல் செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படும்.
இணைக்கும் முறையை மிகவும் எளிமையாக்கியுள்ள வருமான வரித்துறை, அதற்கென பிரத்யேக இணையதளத்தை வழங்கியுள்ளது. பொதுமக்கள் eportal.incometax.gov.in என்ற தளத்திற்குச் சென்று, தங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளிட்டு மிக எளிதாக இந்த இணைப்பை உறுதி செய்து கொள்ளலாம். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்கவும் இப்போதே இந்த வேலையை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
