TASMAC மதுபான விற்பனையில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், கடுமையான எச்சரிக்கைகளை நிர்வாகம் விடுத்துள்ளது. விற்பனை விவரங்களுக்கும், வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்திற்கும் இடையே வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மேலாளர்களும் மதுபான விற்பனைத் தொகையையும், வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தையும் தினந்தோறும் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விற்பனைத் தொகையில் குறைவு கண்டறியப்பட்டால், அந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் இருந்து முழுவதுமாக வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், விற்பனைப் பணத்தை கையாளுவதில் உள்ள குறைபாடுகளைக் களைவதோடு, ஊழியர்கள் நிதிப் பொறுப்புடன் செயல்படுவதை உறுதிசெய்யவும் TASMAC நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
