சமீபத்தில் சமூக வலைதளங்களில் 42 வயதான மகேந்திர சிங் தோனியையும், பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் 45 வயதான சோயப் மாலிக் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடலமைப்பை வைத்திருப்பதைப் போலவும், தோனி வயதாகிவிட்டது போலவும் கிண்டல் செய்யும் நோக்கில் அந்தப் புகைப்படம் பகிரப்பட்டது.

மேலும் அனுபவ வீரரான தோனியின் ஃபிட்னஸ் குறித்து பாகிஸ்தான் ரசிகர் கேள்வி எழுப்பியது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகக் கடுமையான மற்றும் சுவாரஸ்யமான பதிலடிகளை கொடுத்து வருகின்றனர். உடல் கட்டுக்கோப்பு என்பது வெறும் காட்சிக்கு மட்டுமல்ல, களத்தில் காட்டும் செயல்பாட்டில்தான் உள்ளது” என்று இந்திய ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இப்போதும் தோனி அடிக்கும் சிக்ஸர்களையும், மின்னல் வேக விக்கெட் கீப்பிங்கையும் வீடியோக்களாகப் பகிர்ந்து, “சிங்கம் என்றுமே சிங்கம்தான்” என பாகிஸ்தான் ரசிகரின் வாயடைக்கச் செய்துள்ளனர். இந்த மோதல் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.