செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கீதா. இவர் அச்சரப்பாக்கம் கிராம உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கிராம நிர்வாக அலுவலராக முத்துமாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பார்க்க வரும் ஆண்கள் மதுபோதையில் வருவதாக தெரிகிறது. இதனால் தனது பணியை சரிவர செய்ய முடியவில்லை என கீதா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கீதாவிடம் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வாங்கி தனக்கு கொடுக்க வேண்டும் என கீதாவை கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 17-ஆம் தேதி அரசு உத்தரவின் அடிப்படையில் ஆட்சேபனையில்லா வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க அந்த பகுதிக்கு கோட்டாட்சியர் சென்றுள்ளார். அப்போது தாமதமாக சென்ற கீதாவை அதிகாரிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அதிகாரிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா விஷம் குடித்தார்.

அவரை அக்கம் பக்கத்துல மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீதாவின் மகள் லாவண்யா கூறும்போது, 8 மாதமாக எனது அம்மா மன உளைச்சலில் இருந்தார்.

அவருக்கு தொந்தரவு கொடுத்தனர். நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்தார். அவரது இறப்பிற்கு அதிகாரிகள் தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது இறப்பிற்கு அதிகாரிகள் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.