இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியில், ஒரு டிரக் மேல் நின்று வேலை செய்து கொண்டிருந்த நபரை, கீழே நின்ற மற்றொரு நபர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, டிரக் பின்கதவு திடீரென சட்டென்று மூடிக்கொண்டது. அது கீழே நின்ற நபரின் தலையில் கனமாக இடித்து, அவர் சுயநினைவிழந்து தரையில் விழுந்தார். காணொளியில், அவரது தலையிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறுவது தெளிவாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் வைரலாகி, பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தக் காணொளியைப் பார்த்தவர்களில் சிலர், அந்த நபர் இறந்துவிட்டதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது உண்மையான நிலை என்ன என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இது வேலை செய்பவர்கள் மட்டுமின்றி, வேடிக்கை பார்ப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடமாக அமைந்துள்ளது.