அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவையில் 54 இளநிலை உதவியாளர்கள் (Junior Assistants) பணிநியமனம் செய்யப்பட்டனர். இந்த பணிநியமனங்கள் அனைத்தும் முறையான விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் இந்த நியமனங்களை ரத்து செய்து முன்னரே அதிரடி ஆணை பிறப்பித்திருந்தது. இந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் முன்னாள் அமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே செல்லும் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட அந்த 54 இளநிலை உதவியாளர்களின் பணிநியமனம் முற்றிலும் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு இதன் மூலம் இறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிமுக வட்டாரத்திலும், அந்த 54 ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
