அமெரிக்க கடற்படையின் முற்றுகை காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த சூழலில், அந்த வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்தியக் கப்பல்கள் உடனடியாகப் பின்வாங்கித் திரும்பின.
இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்திய அரசு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனையின் போது, பாதுகாப்பாகக் கடக்க வேண்டிய 21 இந்தியக் கப்பல்களின் பட்டியல் ஏற்கனவே ஈரானிடம் வழங்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்த ஈரான் தூதர், இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும், முறையான தகவல் தொடர்பு இல்லாததால் ஏற்பட்ட தவறு என்றும் கூறினார். மேலும், இந்தியக் கப்பல்களைத் தாக்கும் உள்நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
