மும்பை புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புனே மாநகராட்சியின் 34-வது வார்டில் போட்டியிட சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் காம்ப்ளே மற்றும் மச்சிந்திரா தவலே ஆகிய இருவருக்கும் அங்கீகார கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

வேட்புமனு தாக்கலின் போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி விண்ணப்ப கடிதத்தைப் பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார்.

இந்தச் செயலால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தேர்தல் பணியில் இருந்த அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.