ஹரியானா மாநிலத்தில் ஒரு சாலை சந்திப்பில் ரோட்வேஸ் பேருந்து, சாலையை கவனிக்காமல் கடக்க முயன்ற பைக் மீது மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. விபத்து நிகழ்ந்த துல்லியமான இடம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

நவம்பர் 18-ந்தேதி மதியம் 1.20 மணியளவில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிகழ்வில், பிரதான சாலையில் சென்ற பேருந்து திடீரென முன்புறத்திலிருந்து வந்த பைக்கை தவிர்க்க பிரேக் போட்டதும், அதிக வேகத்தால் மோதல் தவிர்க்க முடியவில்லை. இந்த விபத்தில் பைக்கில் சென்ற தம்பதியினர் காற்றில் தூக்கி வீசப்பட்டனர்.

 

பேருந்து நின்றவுடன் நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் விரைந்து இறங்கி காயமடைந்த தம்பதியினரை பார்த்தனர். அவர்கள் இருவரும் காயத்துடன் உயிர்தப்பினர். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. வைரல் வீடியோ குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தை அடுத்து, பேருந்து அதிவேகமாக சென்றது, ஓட்டுநரின் கவனக்குறைவுதான் காரணம் என சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.