தமிழ்நாட்டில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20, புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, மாணவர்கள் படித்த பள்ளிகளிலும், அவர்கள் சமர்ப்பித்த செல்போன் எண்களுக்கு நேரடியாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாகவும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளப் பக்கா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.