தமிழ்நாட்டில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்து தெரிவித்து அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்; இது உங்களுக்கான ரிசல்ட் மட்டுமல்ல, ஆசிரியப் பெருமக்களின் கற்பித்தல் செயல்பாடு எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது? தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான ரிசல்ட் தான் இது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் யாரும் தேவையின்றிப் பதற்றமடையாமல், தைரியமாக முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் விடுத்துள்ள இந்த எமோஷனல் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.
