நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், ஊபர் வாகன ரைடு சேவையை ரூ.6-க்கு பெண் ஒருவர் பெற்றுள்ளார். இந்த சுவாரஷ்யமான தகவலை அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட்டானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எப்படி சாத்தியமென்றால் ஊபர் ஆட்டோ சவாரியில் வண்டியை முன்பதிவு செய்துள்ளார்.

அப்போது விளம்பரக் குறியீட்டை உள்ளிடும்போது, ​​அவருக்கு ரூ.6-க்கு சேவைகளைப் பெற முடிந்தது. இது அசல் விலையான ரூ.46.24-ஐ விட மிகவும் குறைவு. இதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.