இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் கம்பி வேலிக்கு அப்பால் நின்றிருந்த பாகிஸ்தான் சிறுவன் ஒருவன், வெறும் 10 ரூபாய் நோட்டைக் கண்டதும் “பாரத் மாதா கீ ஜே” மற்றும் “இந்தியா இஸ் பெஸ்ட்” என முழு ஆக்ரோஷத்தோடு முழக்கமிட்டுள்ள ஒரு வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாக்களில் வெளியாகி இரு நாட்டு நெட்டிசன்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தி அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இரும்பு வேலிக்கு அந்தப் பக்கம் உள்ள புல்வெளியில் சில பாகிஸ்தான் சிறுவர்கள் புல் அறுத்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இந்தியாவின் எல்லைப் பகுதியில் நின்றிருந்த நபர் ஒருவர், வேலியின் அருகே சென்று தனது பாக்கெட்டில் இருந்த ஒரு 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த சிறுவர்களிடம் காட்டி ஆசையைத் தூண்டியுள்ளார்.
View this post on Instagram
மேலும், “யாரெல்லாம் சத்தமாக பாரத் மாதா கீ ஜே, இந்தியா இஸ் பெஸ்ட் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கு இந்த 10 ரூபாய்” என்று விளையாட்டுத் தனமாகக் கூற, அதைக்கேட்ட ஒரு சிறுவன் அடுத்த நொடியே எதையும் யோசிக்காமல் தனது முழு பலத்தையும் திரட்டி “பாரத் மாதா கீ ஜே.. இந்தியா இஸ் பெஸ்ட்” என உரக்கக் கூவியுள்ளான்.
இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த அந்த இந்திய நபர், “இந்த 10 ரூபாய் நோட்டு உங்க ஊர்ல செல்லுமா?” எனக் கேட்க, அதற்கு அந்தச் சிறுவன் சற்றும் சளைக்காமல், “இப்ப எனக்கு 10 ரூபாய் பத்தாது, 20 ரூபாய் கொடுங்க” எனத் தனது டிமாண்டை மாற்றி அடம் பிடித்துள்ளான்.
காசுக்காக அந்தப் பாக். சிறுவன் காட்டிய இந்த அதிரடி சாதுரியம் மற்றும் அவனது வெள்ளந்தியான பேச்சைக் கண்டு அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ‘பணத்திற்கு முன்னால் நாடாவது எல்லையாவது, சிறுவன் ஒரு பக்காவான பிசினஸ்மேன் போலச் செயல்பட்டுவிட்டான்’ என்றும், ’10 ரூபாய்க்கே இப்படிப் பேசுகிறான் என்றால் 100 ரூபாய் கொடுத்திருந்தால் என்னவெல்லாம் பேசியிருப்பானோ’ என்றும் விதம் விதமாகக் கமெண்டுகளைத் தட்டிவிட்டு வருவதால், இந்த எல்லைப் பகுதி வீடியோ தற்பொழுது இணையதளத்தின் மிக முக்கியமான பொழுதுபோக்கு விவாதப் பொருளாக மாறி வைரலாகி வருகிறது.
