கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் பிப்ரவரி 14-ஆம் தேதி கார் ஹார்ன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், ஒரு கும்பல் காரில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துத் தாக்கியுள்ளது.

பொதுவெளியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை இரண்டு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

“>

 

தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.