கோடைகாலத்தின் கடும் வெயிலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, மக்கள் பல்வேறு புதுமையான மற்றும் விசித்திரமான முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு தம்பதியினர் பைக்கில் பயணம் செய்யும் போது, வெயிலிலிருந்து தப்பிக்க மிகவும் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளனர்.
இந்த அரிய காட்சியைச் சாலையில் பார்த்த மக்கள் ஆச்சரியத்துடன் இதைப் பார்த்ததோடு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இவர்களின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினாலும், பலர் இந்த விசித்திரமான ஏற்பாட்டைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் “இவர்களின் திறமைக்கு முன்னால் பெரிய பெரிய நாடுகளின் தொழில்நுட்பமும் தோற்றுவிடும்” என்று பலரும் கிண்டலாகவும் பெருமையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
