காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷாலுக்கு நண்பனாக நடித்த சூரி, பரோட்டா சாப்பிடும் குறிப்பிட்ட அந்த காட்சியால் மட்டுமே வெகுவாக பாராட்டப்பட்டார்.

இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். 90களில் இருந்தே திரைத்துறையில் இருந்தவர், அந்த காமெடியால் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார். இந்நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர், பரோட்டா காமெடியில் 13 பரோட்டாக்கள் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சு வைரலாகியுள்ளது.