ராஜஸ்தானின் அஜ்மீரில், ஓடும் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த ஒரு இளம் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 25-ம் தேதி வியாழக்கிழமை இரவு, அஜ்மீர் நகரில் வேகமாக சென்ற பைக்கில், திரைப்பட பாணியில் காதல் காட்சியில் ஈடுபட்ட ஜோடியை ஒரு வழிப்போக்கர் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். அதில், பெண் ஒருவர் பைக்கின் எரிபொருள் டேங்க் மீது அமர்ந்து, பைக் ஓட்டும் தனது காதலனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது பைக் ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், மிகுந்த வேகத்தில் பைக்கை ஓட்டியமை உயிருக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அஜ்மீர் காவல்துறை சம்பவத்தைக் கடுமையாக எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஜோடியை அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
हद है… क्या कहेंगे?#राजस्थान : बाइक की पेट्रोल टंकी पर बैठी लड़की. बीच सड़क चल रहा युवक-युवती का रोमांस. अजमेर पुलिस वीडियो की जांच में जुटी!#rajasthan | #video | #india #ncrpatrika #ViralVideos #RajasthanPolice #bike pic.twitter.com/xMD97vDZ0Q
— NCR पत्रिका (@ncrpatrika) September 26, 2025
@ncrpatrika என்ற சமூக வலைதள பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்ததுடன், @RajPoliceHelp மற்றும் @AjmerPoliceR ஆகிய காவல்துறை அதிகாரிகளையும் குறிப்பிட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ளது. அதற்கும் பதிலளித்துள்ள @AjmerPoliceR, “சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. மேலும் அதிக வேகத்தில் பைக் ஓட்டும் போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இன்றி இப்படியான ஸ்டண்ட்களில் ஈடுபடுவது தங்களுக்கும் பிற பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என காவல்துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.
