கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் நரகேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஹேமாவதி பிரகாஷ் கெடகேரி (வயது 34) என்ற பெண், தன்னுடைய தோற்றம் குறித்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் வாழ்ந்து வந்த ஹேமாவதி, முகத்தில் காணப்பட்ட கரும்புள்ளிகள் காரணமாகப் பெரிதும் மனவேதனையில் இருந்துள்ளார். “தான் அழகாக இல்லை” என்ற எண்ணம் காரணமாக வெளியில் செல்லாமலும், வீட்டிற்குள்ளே முடங்கி வாழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சம்பவத்தன்று அவரது கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்துவந்த ஹேமாவதி, சமையல் அறையின் வாசலில் உள்ள கம்பியில் தனது சேலையை பயன்படுத்தி தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

உடனடியாக தகவல் பெறப்பட்ட நரகேல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹேமாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அவரின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த துயரமான சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.