நாம் தமிழர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிட உள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 20 பெண் வேட்பாளர்கள் மற்றும் 20 ஆண் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மேடையில் பேசிய சீமான், ஐயா வீரப்பனார் வனம் காக்க போராடினார், இனம் காக்க நானும் என் மகளும் போராடுகிறோம் என தெரிவித்தார்.