சமூக வலைதளங்களில் அவ்வப்போது குழந்தைகளின் மழலை மாறாத செயல்கள் இணையவாசிகளின் மனதைக் கவர்வதுண்டு. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தந்தை தனது குழந்தையிடம் ஒரு வேடிக்கையான நிபந்தனையை விதிக்கிறார்.

உனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டுமானால், அழுது காட்டு” என்று தந்தை கூற, அதைக் கேட்ட அந்தச் சிறுவன் எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக அழுதுக் காட்டும் பாவனை செய்கிறான். குழந்தையின் இந்தத் துரிதமான மற்றும் கலகலப்பான எதிர்வினை, பார்ப்பவர்களைச் சிரிக்க வைப்பதோடு, அந்தச் சிறுவனின் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Trending News 24hr™ (@trendingnews24hr)

“>

இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாகக் குழந்தைகள் வீட்டிற்குச் செல்ல அடம்பிடிப்பது வழக்கம், ஆனால் இங்கே தந்தை கேட்டவுடன் ஒரு நடிகனைப் போலக் கணப்பொழுதில் அழுது காட்டிய அந்தச் சிறுவனின் வீடியோ ‘கியூட்’ ரகம்.

மேலும் மழலையின் இந்தச் சுட்டித்தனமான வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பலரது அன்றாட அழுத்தங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.