கரூர் மாவட்டத்தில் உள்ள செங்காளிவலசு பகுதியில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சில மர்ம நபர்கள் சிவஞானத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்கள் கத்தி முனையில் சிவஞானத்தின் குடும்பத்தினரை மிரட்டி 4 1/2 தங்க நகை, 40 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிவஞானம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்