அசாம் மாநிலத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடிக்கடி நடந்த தகராறுகள் பின்னர் ஒரு கொடூர முடிவுக்கு காரணமாகியுள்ளது.

சபியல் ரஹ்மான் என்பவர், தனது மனைவி ரஹிமா கதுன் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர்களிடையே சமீபமாகவே பிரச்சனைகள் மோசமாகியிருந்ததாக கூறப்படுகிறது.

ஜூன் 26-ஆம் தேதி, இருவருக்குள்ளான கடுமையான வாக்குவாதம் கட்டுப்பாட்டை இழந்த முற்றியுள்ளது . சபியல் ரஹ்மான் குடிபோதையில் இருந்த நேரத்தில், மீண்டும் பிரச்னை தீவிரமடைந்துள்ளது , இந்நிலையில் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில்  ரஹிமா, அவரை அடித்து கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு  பின்னர், பயத்தில் உறைந்த ரஹிமா, வீட்டிலேயே 5 அடி பள்ளம் தோண்டி கணவரின் உடலை புதைத்து, வெளியே எதுவும் நடக்காதது  போல நடித்து வந்துள்ளார்.

ஆனால், அக்கம்பக்கத்தினர் சபியல் ரஹ்மானை காணாததை பற்றி கேட்டுள்ளனர், அவரது மனைவி கணவர்  வேலைக்காக கேரளா சென்றுள்ளார் என்று விளக்கம் அளித்ததையும் சந்தேகத்துடன் கவனித்துள்ளனர். சந்தேகங்கள் அதிகரிக்க அதிகரிக்க பதட்டம் அடைந்த , ரஹிமா திடீரென “உடல்நிலை சரியில்லை” எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறியதும்,

இதற்கிடையில், சபியாலின் சகோதரர் போலீசில் “சபியல் ரஹ்மான் காணவில்லை” புகார் அளித்திருந்தார். விசாரணை தீவிரமாகத் தொடங்கிய நிலையில், ரஹிமா நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்து, கணவனை கொலை செய்து வீட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.