பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடும்பத்தோடு பஃபே விருந்துக்குச் செல்லும்போது ‘வீட்டின் கடைசிப் பிள்ளை’ படும் பாட்டை நகைச்சுவையாகப் படம் பிடித்துக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பொதுவாக விசேஷங்களின்போது மற்றவர்கள் நிம்மதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, வீட்டின் இளைய பிள்ளைகள் தான் தண்ணீர் எடுப்பது முதல், ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுகளைப் பரிமாறி ஓடி ஓடி உழைப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும்.
View this post on Instagram
“>
இதனை அந்த இளைஞர் “வாழ்க்கையே ஒரு பர்சனல் வெயிட்டராக மாறிவிட்டது” என்ற ரீதியில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் தங்களது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஆசியக் குடும்பங்களில் கடைக்குட்டி பிள்ளைகள் படும் கஷ்டங்களை இந்த வீடியோ துல்லியமாகப் பிரதிபலிப்பதாகப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது வெறும் வீடியோ மட்டுமல்ல, எங்களைப் போன்ற இளைய பிள்ளைகளின் வாழ்க்கை வரலாறு என்று ஒரு பயனர் பதிவிட, அந்த இளைஞரின் எதார்த்தமான நடிப்பு இணையத்தில் பலரது சிரிப்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
