
தமிழகத்தில் புயல் மழையால் பாதித்த நான்கு மாவட்டங்களில் தேவைப்படுவோருக்கு வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 மினி டேங்கர்களின் வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதோடு நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்புக்கு உள்ளான இடங்களில் 39 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இயங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.