தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X  பக்கத்தில் நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மிக்ஜாம்  புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளாத,  நிவாரண உதவிகளை வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் பிற  மாவட்டங்கள் உட்பட மாநில அளவில் புயல் அல்லது கனமழை குறித்து எனது தலைமையிலான அம்மாவின் அரசில் முன்னெச்சரிக்கை கூட்டங்கள் நடத்தப்படும்.

சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டு,  வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும்.  ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு நேரடியாக சென்று,  அங்குள்ள வருவாய், மாநகராட்சி, காவல்துறை, பெருநகர குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம் போன்ற தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று,   தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் அதை எப்படி அப்புறப்படுத்துவது என்பது பற்றி எல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து மழைக்காலங்களில் தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்த திட்டமிடுவார்கள். இந்தப் பணிகள் எல்லாம் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே திட்டமிடப்படும். மேலும் கால்வாய்களில் தேங்கியுள்ள மண் பருவமழைக்கும் முன்னதாகவே அகற்றப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் புயல் பற்றிய தகவலை வழங்கியவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண மையங்கள், உணவு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், படகுகள் தயார் நிலையில் இருப்பதோடு, மீட்பு பணிகள் ஈடுபட மாநில மற்றும் மத்திய அரசின் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இதனால்,  மீட்டுப் பணிகள் எங்கள் ஆட்சியில் சுணக்கம் இன்றி நடைபெற்றது.

மேலும் எங்கள் அரசு மக்களுக்கு ஐந்து நாட்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள்,  போதுமான அளவு குடிநீர் மற்றும் அவர்களின் வீடுகளில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை நிரப்பி கொள்வது போன்றவற்றையும்  மற்றும் முக்கிய ஆவணங்கள், மாணவர்களின் பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றை பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு  செய்யும். ஆனால் இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கையினை  மக்களிடம் செய்ய தவறிவிட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் 5 நாட்களுக்கு முன்பே ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கிய பின்பும்,  விடியா தி.மு.க அரசு மழை பெய்த பின்பு ராட்சத மோட்டார்களுக்கு ஏற்பாடு செய்வதும்,  மற்ற  ஏற்பாடுகள் செய்வதும் இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

 

4.12.2023 அன்று தலைமைச் செயலாளர் தொலைக்காட்சிகளுக்கும்,  பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்த போது,  மழை நீரை அகற்றுவதற்கு பல்வேறு இடங்களில் ராட்சத் மோட்டார்கள் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கிறார். இந்த ராட்சத  மோட்டார்கள் எப்போது வந்து தேங்கிய தண்ணீரை அகற்றும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே தேங்கிய தண்ணீரை  அகற்றுவதற்கு ராட்சத  மோட்டார் தயார் நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது. மேலும் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு வாடகைக்கு வாங்கப்பட்ட சிறுசிறு மோட்டார் பம்பு செட்டுகளுக்கு டீசல் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்பதால் பல இடங்களில் அந்த மோட்டார்கள் இயங்காமல் இருப்பதாக அந்த பகுதி மக்கள் விடியா தி.மு.க அரசை குறை கூறிய நிகழ்வுகளும் 5.12. 2023 இல் நடந்தன.

மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில் இப்போது வரை சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சுமார் 38,500 பிரதான உட்புற சாலைகளில் சுமார் 20,000 சாலைகளில் மழைநீர் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.  அதேபோல் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் வாடியாமல், மழை நீர் வடியாம,ல் கழிவுநீருடன் கலந்து நோய் தொற்று பரவும் அபாயத்தில் உள்ளது.

எங்கள் ஆட்சி காலத்தில் கன மழை மற்றும் புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு,  அங்கு தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பாய், போர்வை போன்ற பொருட்களும் வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த ஆட்சியில் 5.121 2023 அன்று தான் ஒரு சில இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிய வருகின்றன.

5.12.2023 அன்று வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டு கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன். 6.12.2023 காலை வர காலை வரை அரசின் சார்பில் எந்த விதமான நிவாரண பொருட்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது. எனவே உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்துகிறேன்.

6.12.2023 அன்று வெளிவந்த மாலை பத்திரிகைகள்,  24 மணி நேர ஊடக செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் இன்னும் பல பகுதிகளில் மழை  வெள்ளத்தில் மூழ்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளன.  குறிப்பாக ஒரு லட்சம் வீடுகளை மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்று செய்திகள் தெரிவித்தன

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் பாடி, கொரட்டூர், முகப்பேர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக இந்த விடியா தி.மு.க அரசின் இரண்டு முறை மின் கட்டண உயர்வால் ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருந்த இத்தொழிற்சாலைக்குள் தற்போதைய மழை வெள்ளம் புகுந்து இயந்திரங்கள் இயக்க முடியாத நிலையில் உள்ளதாகவும்,  வெள்ளை நீரை அகற்றி மீண்டும் தொழிற்சாலை முழுவதும் இயங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும் என்று தொழில் கூட்டமைப்பினர் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றன. எனவே இந்த விடியா தி.மு.க அரசு இத்தொழ்ற்பேட்டைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அப்பறப்படுத்துவதோடு அவர்களுக்கு நிவாரணம் வழங்கிடவும்,  மின்சார கட்டண சலுகை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்.

ஒரு சில இடங்களில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட இந்த விடியா திமுக அரச,  பணிகள் முடிவுற்ற கால்வாய்களை சரியான முறையில் இணைக்க தவறியதால் தாழ்வான பகுதிக்கு குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது என்று தெரிய வருகிறது. எனவே இதை உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்துகிறேன்.  இந்த மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாக திறமையற்ற விடியா திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விடியா  திமுக அரசின் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் வாய் சொல்லில் ஜாலம் காட்டுகிறார்கள். இதுபோன்ற இயற்கை சீற்றங்களை முறையாக கையாளாமல்,  இம்மழையினால் பொதுமக்கள் அவதி உச்சி வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடியா  தி.மு.க அரசின் பொம்மை முதலமைச்சரும், மந்திரிகளும்,  ஊடகங்களுக்கு தங்கள் முகத்தை காண்பிப்பதற்கு முனைப்பாக உள்ளனர். இதுவே அம்மா ஆட்சியில் எங்களது அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் அனைத்து துறை அலுவலர்களுடன் தங்கி நிவாரணப் பணிகள் மேற்கொண்டு உள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள.

இந்த மழையின் போது மின் கம்பங்கள்,  மின் கோபுரங்கள் பெருமளவில் சேதமடைந்ததாக தெரியவில்லை. ஆனாலும் மின் துண்டிப்பு முழுமையாக நடைபெற்றது. மின் இணைப்பு இல்லாத காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் மாற்றும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் மின்மோட்டார் இயக்காமல் குடிதண்ணீருக்கும்,  இயற்கை உபாதைகளுக்கும் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமத்துக்கு  உள்ளாகியுள்ளனர்.மேலும்,

 

இந்த விடியா தி.மு.க அரசு திட்டமிட்டே மழையின் பாதிப்புகள் மற்றும் இந்த அரசின் அவலங்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன்  6. 12 . 2023 மாலை வரை 50% மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பால் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். மின்சாரம் இல்லாமல் ஒரு சிலர் வாங்கிய அதிக எண்ணிக்கையிலான பாலும் கெட்டுவிட்டதாகவும்,  இதற்கு இந்த விடியா திமுக அரசே பொறுப்பு என்றும்,  பாலுக்காக மக்கள் பால் விற்பனையாளர்களுடன் சண்டை போடுகின்ற நிகழ்வுகள் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த விடியா திமுக அரசு,

உடனடியாக அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பை வழங்க வலியுறுத்துகிறேன்.

எங்கெங்கு தண்ணீர் தேங்கியுள்ளதோ,  அதனை உடனடியாக சிறப்பு முயற்சி எடுத்து மழை நீரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் உடனடியாக சீரமைக்க வலியுறுத்துகிறேன்.

வெள்ள நீரை அப்புறப்படுத்தியவுடன் உடனடியாக ப்ளீச்சிங் பவுடர்,  பினாயில் கொண்டு சுத்தம் செய்து,  நோய் தொற்று ஏற்படா வண்ணம் துப்புரவு பணிகளை மேற்கொள்வதுடன்,  500 வீடுகளுக்கு ஒரு முகாம் என்று சிறப்பு மருத்துவ முகாமை நடத்த வலியுறுத்துகிறேன்.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தை சீர் செய்யவும்,  அண்டை மாநிலங்களில் இருந்து பாலையை உடனடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு தங்கு தடை இன்றி பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் அரிசி, பருப்பு, பால்,  மளிகை பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்துகின்றேன்.

சென்னை மாநகரில் சுமார் 4000 கோடி மதிப்பீட்டில் வெள்ள நீர் வடிகால் பணிகள் நடந்ததாக இந்த விடியா  திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகள் பட்டியலை வெளியிட இந்த அரசு தயாரா ? பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தர தயாரா ? 100% பணி முடிந்த இடங்கள் தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை  ஒன்றை விடியா  திமுக அரசின் முதல் அமைச்சர் திரு. ஸ்டாலின் வெளியிட வேண்டும்.  ஏதாவது சொல்லி ஏமாற்றி தப்பிவிடலாம் என்று இந்த நிர்வாக திறமையற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால்,  அதற்கு உண்டான பதிலை பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் செலுத்துவார்கள் என்று எச்சரிக்கின்றேன் என நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.