அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசை கட்டாயமாக இருக்கும். ஆனால் ஒரு சிலரால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். ஒரு சிலரால் முடியாது. ஒரு சிலர் கடனை வாங்கியாவது வீடு கட்டுவார்கள். ஒரு சிலரோ கட்டிய வீட்டை தவணைத்தொகைமுறையில் வாங்கி விடுவார்கள் .அவ்வாறு சொந்தமாக வீட்டை கட்ட வேண்டும் என்று கனவு காண்பவருக்கு அதை நிறைவேற்ற ஒரு வழி இருக்கிறது. அதாவது பல வங்கிகளிலும் வீட்டுக் கடன் வாங்குபவர்களுடைய தேவையை பொறுத்து வெவ்வேறு வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் வங்கிகளில் பண்டிகை கால சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

அதனை பயன்படுத்தி குறைந்த விலையில் குறைந்த வட்டிக்கு சில சலுகைகளோடு வீட்டுக் கடனை பெறலாம். அந்த வகையில் பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடனை வழங்குகிறது. கடன் சலுகை 8.40 சதவீதத்திலிருந்து ஆரம்பம் ஆகிறது. சம்பள கணக்கு, வணிக கணக்கு, குடும்ப கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான செயலாக்க கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

sbi வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் கொடுக்கும் பொழுது செயலாக்க கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை. அதேபோல எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு 8.35% வட்டியில்  வீட்டு கடனை கொடுக்கிறது .இந்த வங்கி செயலாக்க கட்டணத்தில் 5% தள்ளுபடி மட்டுமே வழங்குகிறது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 8.35 சதவீதம் வட்டி விதத்தில் வீட்டு கடனை வழங்குகிறது .பூஜ்ஜிய செயலாக்க கட்டணத்தை தவிர முன்கூட்டி எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. பஞ்சாப் நேஷனல் வங்கி 8.40 சதவீதம் வட்டி வீதத்தில் வீட்டு கடனை வழங்குகிறது .கனரா வங்கி 8.40% வட்டி விகிதத்தில் வழங்குகிறது.