நீட் தேர்வுக்கான சிலபஸ் குறைக்கப்பட்ட இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  எம்பிபிஎஸ்,  பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அடுத்தாண்டு நீட் நுழைவுத் தேர்வு 2024 மே மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அதற்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கெமிஸ்ட்ரி  மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் பல பகுதிகள் நீக்கப்பட்டு இருக்கிறது. அது குறித்து விரிவான அறிவிப்பு தேசிய தேர்வு முகமை இணையதளத்தின் வாயிலாக சென்று மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல்  நீட் எக்ஸாம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் தற்போது நீட் சிலபஸ் குறைக்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் தெரிவித்த காரணம் என்னவென்றால் கொரோனா காலகட்டத்தில் சிபிஎஸ்இயினுடைய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. ஏனென்றால் குறைவான காலகட்டம் தான் இருந்தது.

ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு கற்பித்தல் பணி நடைபெற்றது. எனவே அந்த காலகட்டத்தில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல பகுதிகள் நீக்கப்பட்டது. கடினமான பகுதிகள் நீக்கப்பட்டது. ஒரு சிலபஸில் 75% மட்டும் தான் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போதும்  நீக்கப்பட்ட பாடங்களுடனே தான் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முழு பாடத்திட்டத்தை மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால்  சிபிஎஸ்சியை பொருத்தவரை கொரோனா காலகட்டத்தில் நீக்கப்பட்ட…. குறைக்கப்பட்ட பாடத்தை தான் 2020 கொரோனா காலகட்டத்தில் இருந்து இன்று வரை அப்படியே படித்து வருகிறார்கள்.  எனவே பொதுத்தேர்வுக்கு குறைவான பாடத்திட்டத்தை படித்துவிட்டு நீட் தேர்வுக்கு எப்படி நாங்கள் முழுமையான தேர்வை படிக்க முடியும்.

நாங்கள் எப்படி தேர்வு எழுத முடியும் ? என்று சில மாணவர்கள் கேள்வி எழுப்பி தேசிய தேர்வு முகமைக்கும், மருத்துவ கல்வி இயக்கத்திற்கும்  கடிதம் எழுதியிருந்தார்கள்.  அந்த அடிப்படையில் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று  சிபிஎஸ்சி சிலபஸ்க்கு ஏற்றவாறு பாடங்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.  எனவே நீட் தேர்வுக்கு தயாராகக்கூடிய மாணவர்கள் இந்த புதிய சிலபஸை  டவுன்லோட் செய்து அதற்கு ஏற்ப தயாராக வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.