திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதான பிரவீன்குமார் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த 19 வயதான ஜெயஸ்ரீ ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த காதலர்கள்.

கடந்த சில நாட்களாக காதலை தொடர விரும்பவில்லை என ஜெயஸ்ரீ தெரிவித்ததை தொடர்ந்து, மனமுடைந்த பிரவீன்குமார் நேற்று ஜெயஸ்ரீயை திருவாரூர் அழைத்து வந்து, திருக்கண்ணமங்கை அருகே உள்ள சேட்டாகுளம் கரையில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

“>

 

இதை எதிர்பார்க்காத ஜெயஸ்ரீ அவரை காப்பாற்றும் நோக்கில் குளத்தில் குதித்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் பிரவீன்குமார் உயிரிழந்தார். ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்