ராஜ்கோட்டில் உள்ள ஓம் வெல்னஸ் சென்டரில் நடந்த யோகா வகுப்பில் பங்கேற்ற 52 வயது ராஜேந்திரசிங் ரதன்சிங் குர்ஜி என்பவர், வகுப்பு முடிந்ததும் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்த போது, அவர் படிக்கட்டின் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்து மார்பை தடவியபடி வலியால் தவித்தார். சில நிமிடங்களில் அவர் அந்த இடத்தில்வே சுருண்டு விழுந்துவிட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. குர்ஜி, சத்தீஸ்கரிலிருந்து ராஜ்கோட்டுக்கு வந்து ராஹிலா நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றி வந்தவர். யோகாவை தினசரி செய்து வந்த அவருக்கு, இந்த பயிற்சிக்குப் பிறகு உடல்நிலை சீர்கெட்டு உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Rajendra Singh (52) returning from Yoga centre dies of #heartattack https://t.co/ygqpPqwmIc https://t.co/a1FBJUDF4k pic.twitter.com/RHQp5whl9r
— Dee (@DeeEternalOpt) July 25, 2025
இது போல உடற்பயிற்சி அல்லது யோகாவுக்கு பிறகு ஏற்படும் திடீர் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய மருத்துவ நிபுணர்கள், மருத்துவ சோதனைகள் அவசியம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
