தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் முன்பு தெரிவித்த ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இதனில் “விஜய்யின் அரசியல் வருகை குறித்து இப்போது பலரும் சந்தேகிக்கலாம், ஆனால் எனது இந்த வீடியோவைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதை மீண்டும் போட்டுப் பாருங்கள்” என்று பிரசாந்த் கிஷோர் அந்தப் பேட்டியில் சவால் விடுத்திருந்தார்.

“>

மேலும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மிகவும் திட்டமிடப்பட்டவை என்றும், அவர் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்றும் அவர் கணித்திருந்தது, தற்போது தவெக-வின் எழுச்சியால் மீண்டும் கவனம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநாடு மற்றும் அதற்குப் பிறகு அக்கட்சிக்குக் கிடைத்து வரும் மக்கள் ஆதரவு, பிரசாந்த் கிஷோரின் பழைய கணிப்பை உண்மை ஆக்குவது போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இது ‘குறிப்பாக, பாரம்பரியமிக்க திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான சக்தியைத் தேடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் விஜய்க்கு கிடைத்துள்ள வரவேற்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “இந்த வீடியோவை பத்திரமாக வைத்திருங்கள்” என கிஷோர் அன்று சொன்ன வார்த்தைகள், இன்று தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.