தமிழகத்தில் இந்த முறை தேர்தல் நான்கு முறை போட்டிகளோடு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த முறை புதியதாக களம் கண்ட தமிழக வெற்றி கழகம் பல இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் திமுக மற்றும் அமுதிக ஆகிய கட்சிகளுக்கு கடும் சவால் கொடுத்தது.

தமிழக வெற்றி கழகம் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டிகள் நிலவிய நிலையை தற்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக கட்சியின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் தங்களுடைய சொந்த தொகுதியை கோட்டை விட்ட நிலையில் தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் ஜெயித்தது அறிவாலய வட்டாரத்தில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.