புதுதில்லியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு இளைஞர், ஒரு பெரிய மலைப்பாம்பை கயிற்றால் கட்டி, தனது பைக்கில் சாலையில் இழுத்துச் செல்கிறார்.
இந்த வீடியோவை பின்னால் வந்த ஒரு காரில் இருந்தவர் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வீடியோவில், உதவியற்ற நிலையில் பாம்பு சாலையில் இழுக்கப்பட்டு துன்பப்படுவதைக் காண முடிகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி மற்றும் கோபத்தில் உள்ளனர். பலரும், “இப்படி விலங்குகளிடம் கொடுமை செய்வதை எப்படி யாராவது அனுமதிக்க முடிகிறது?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். இது விலங்கு உரிமை மீறல் என்றும், இந்த செயலுக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
छत्तीसगढ़ के कांकेर में एक युवक अजगर को रस्सी से बांधकर अपनी बाइक से खींचता हुआ नजर आ रहा है pic.twitter.com/ky3f7pJ7DV
— Swaraj Srivastava (@SwarajAjad) August 1, 2025
“>
மலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளாகும் என்பதாலும், இவ்வாறு அவற்றை கொடுமைப்படுத்துவது சட்டபூர்வமாக குற்றமாகும். தற்போது இந்த இளைஞர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்களை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர்.
இந்த வீடியோவின் மூலம் விலங்குகள் மீதான உரிமைகளை மதிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
