ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு சாலை சந்திப்பில்  காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக வந்த ஒரு பள்ளி பேருந்து, சிக்னலில் சாலையை கடந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நேரில் மோதியது. இந்த மோதி தாக்கத்தில் அந்த நபர் நொடிகளில் உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த அந்த காட்சிகள் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

“>

 

விபத்து நேரத்தில் பேருந்தில் மாணவ மாணவிகள் இருந்ததாலும், அவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, பேருந்தை ஓட்டிய டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

 

இந்த சம்பவம், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.