கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ  ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தான் ஏற்கெனவே கூறியது போல், படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.